mercredi 16 juillet 2014

என் இலக்கு




என் இலக்கு

"யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்"  என்ற கூற்றுக்கு ஏற்ப,
யான் பெற்ற தமிழ்
இன்பத்தையும் அறிவையும்
உலக மாந்தர் பலரோடு
பகிர்தலும் - மகிழ்தலும்
இவ்வலைப்பூவின் இலக்கு!

கம்பன் வாழ்த்து



கம்பன் கழகத்தின் வாழ்த்து!
முத்தமிழ் முற்றம் முழுநிலா இன்பத்தைத்
இத்தரை எங்கும் இசைக்கட்டும் - தித்திக்கும்
தேனாய் இலக்கியத்தைத் தோ்ந்த இலக்கணத்தை
வானாய்ப் பொழிக மகிழ்ந்து!

எங்கும் தமிழ்பரவ ஏற்ற வழியமைத்துப்
பொங்கும் புலமை பொலியட்டும்! - சங்கத்
தமிழினிக்கச் சந்தக் கவியினிக்க என்றும்
அமுதப் பதிவுகளை ஆக்கு!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு